Posts

Showing posts from 2013

விஸ்-வரா-வன் | சினி-சிரி-சிறு கதை

முன்குறிப்பு : இதில் வரும் சம்பவம், பெயர் , கதை யாவும் கற்பனையே   உயிரோடிருப்பவரையோ இறந்தவரையோ இனி பிறக்கப்போபவரையோ குறிப்பிடுவன அல்ல . பின்முன்குறிப்பு : இதுல சிலருக்கு டபுள் , ட்ரிபுள் & எக்கச்சக்க ரோல் விஸாம் கஸ்மீரியை உமர் பாய் குடோனுக்குள் அழைத்துச்சென்றார் . அப்போது அங்கே நோயாளி போல் தோற்றமளித்த சிலர் இருந்தனர் . " இவங்களுக்கெல்லாம் என்ன ?" என விஸாம் கேட்க , " வாதம் , தீவிர வாதம் . டீரிட்மென்ட் குடுக்க டாக்டர கூட்டிட்டு வர சொன்னா அப்சல் இப்படி சொதப்பிட்டான் , அதான் உங்கள கூப்டேன் ." என்றார் உமர் . " ஏன் என்ன ஆச்சு ?" என்று விஸாம் கேட்டுக்கொண்டே உள் குடோனுக்குள் நுழைய ,   ".... ண்ணா " என்றொரு அபலக்குரல் கேட்டது . " தளபதி ... நீங்க என்ன இங்க ?" " ஒருத்தர் வந்து இந்த ஜில்லால யார் டாக்டர்னு கேட்டாரு . என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே சொல்லிட்டாங்க ... அது நான்தான்னு சொன்னேன் . கட் பண்ணி பாத்தா என்ன இங்க கட்டிப்போட்டு வெச்ச

கரப்பாம்பூச்சி!

அலுவல் அலுப்பு முடித்து வீடு திரும்பையில் என் முன் ஓடியதொரு கரப்பாம்பூச்சி. மலிவு விலை பேரீச்சம்பழ நிறம் , பச்சை விழுமுன் பறக்கத்துடிக்கும் பைக் - காரர்களின் அவசரம், இரண்டும் கொண்டிருந்தது இந்தக்கரப்பாம்பூச்சி . விண்ணிலிருந்து மண் சேர்ந்த மழைத்துளி தாழ்வாரம் நோக்கி விரைவது போல் இடைவிடாது இயங்கிக்கொண்டிருந்தது இந்தக்கரப்பாம்பூச்சி . அதைக்கொன்றுவிட காலைத்தூக்கும்போது எங்கெங்கோ படித்த கரப்பான்கதைகள் கண்முன் விரிந்தன . பல ஆயிரம் ஆண்டுகளாக பரிணாமம் மாறாததாம் இந்தக்கரப்பாம்பூச்சி . அணுகுண்டு போட்டு அகிலமே மாண்டாலும் அடைப்புக்குள் புகுந்து ஜீவித்திருக்குமாம் இந்தக்கரப்பாம்பூச்சி . எரிமலைக்குழம்புகள் வெடித்துச்சிதறியபோதும் எம்பிக்குதித்து எதிர்த்து வாழ்ந்திடுமாம் இந்தக்கரப்பாம்பூச்சி . உலகையே ஆட்டுவிப்பது ஆண்கள் அந்த ஆண்களை ஆட்டுவிப்பது பெண்கள் அந்தப்பெண்களின் உலகையே ஆட்டுவிக்குமாம் இந்தக்கரப்பாம்பூச்சி. என்ன காரணத்தினாலோ தூக்கிய காலை கீழிறக்கி கரப்பானை

ஜென் குப்பை

அலங்கரித்த முருகன் படம் ஆறிக்காய்ந்த இரண்டிட்லி பீரியட்ஸ் துணி பாதி கடித்த கொய்யா தலப்பாகட்டு பிரியாணி பீஸ் PAN கார்டு ஜெராக்ஸ் கிழிக்கப்பட்ட கவிதைத்தாள்கள் கண்குடையப்பட்ட நடிகை போஸ்டர் பேனா மூடி மேலும் ஒரு முருகன் படம், அருகில் இரு பெண்டிரோடு கின்லே பாட்டில்-மூடியின்றி, கிங்ஃபிஷர் பீர் கேன் ஓல்டு மாங்க் ஒரிஜினல் ரம்-சில காலி போத்தல்கள், என்னவென்றே சொல்ல முடியா அரூப நிலையில் சில வஸ்துக்கள் குழந்தையின் வயிற்றுப்போக்கை சொல்லும் நீராலான மலத்துணி முளைவிட்ட மாங்கொட்டை போதும் போதுமெனுமளவு பிளாஸ்டிக். இத்துணை கொண்டும் ஒரு சின்ன சலனமுமின்றி தன் வேலையைச்செய்துவரும் குப்பைத்தொட்டியும் ஜென்னே!

முதல் கலவி

ஒரு கைகுலுக்கல் போல, மூக்கு சொறிதல் போல, ஒரு இலை இயல்பாக உதிர்வது போல, இருப்பதில்லை -  முதல் கலவி. நிறைந்து வழியும் குடிநீர் குடத்தை விரைந்து மாற்றும் மெட்ரோவாசி போல, சூப்பர் ஃபாஸ்ட் ரயிலின் தடக் தடக் போல, தன் புற்றென்றெண்ணி இடம் மாறி நுழையும் பாம்பு போல, தயங்கித்தயங்கி கூட்டைவிட்டு வெளிவரும் குளவி போல அது ஒரு வித இது.

பயணம்

ஊருக்குப்போவது   எப்போதுமே   சுகமான   அனுபவம் .  அதுவும்   ரயிலில்   என்றால்     இன்னும்   ஜாலி . சைட்   லோயர்   கிடைத்தால்   அது   அதிர்ஷ்டம்   என்   பக்கம்     உள்ள பயணம் . ரெண்டு   ஜன்னல் , சுற்றிலும்   இருட்டு ,  தொலை   தூரத்தில் தெரியும்   நுண்   மின்   விளக்குகள் ,  சில்   காத்து ,  தடக்   தடக்   சத்தம் என   அது   ஒரு   விதமான   வயிற்றுக்கும்   தொண்டைக்கும் உருவமில்லா     உருண்டை   உருளும்   ஃபீல் . எல்லா   பயணங்களிலும்   டிக்கட்   இருக்கிறதோ     இல்லையோ   ஒரு   புக்காவது   வேண்டும்   எனக்கு . படிக்கும்   சந்தர்ப்பம்   கிடைக்கிறதோ   இல்லையோ ,  ஒரு   புத்தகம்   கூட   இருப்பது   ஒரு வித   மெண்டல்   சப்போர்ட்   தரும் .  இந்த   பயணத்தில்   எந்தத்தொந்தரவும்     இல்லாததால்   புத்தகத்தைப் பிரித்தேன் .  கதைத்தொகுப்பு .  தலைப்பு-பயணம் . வாசிக்க   ஆரம்பித்தேன் ...    ஊருக்குப்போவது   எப்போதுமே   சுகமான   அனுபவம் .  அதுவும்   ரயிலில்   என்றால்        இன்னும்   ஜாலி . சைட்   லோயர்   கிடைத்தால்   அது   அதிர்ஷ்டம்   என்   பக்கம்        உள்ள பயணம் . ரெண்டு   ஜன்னல் , சுற்ற