Posts

Showing posts from June, 2013

முதல் கலவி

ஒரு கைகுலுக்கல் போல, மூக்கு சொறிதல் போல, ஒரு இலை இயல்பாக உதிர்வது போல, இருப்பதில்லை -  முதல் கலவி. நிறைந்து வழியும் குடிநீர் குடத்தை விரைந்து மாற்றும் மெட்ரோவாசி போல, சூப்பர் ஃபாஸ்ட் ரயிலின் தடக் தடக் போல, தன் புற்றென்றெண்ணி இடம் மாறி நுழையும் பாம்பு போல, தயங்கித்தயங்கி கூட்டைவிட்டு வெளிவரும் குளவி போல அது ஒரு வித இது.

பயணம்

ஊருக்குப்போவது   எப்போதுமே   சுகமான   அனுபவம் .  அதுவும்   ரயிலில்   என்றால்     இன்னும்   ஜாலி . சைட்   லோயர்   கிடைத்தால்   அது   அதிர்ஷ்டம்   என்   பக்கம்     உள்ள பயணம் . ரெண்டு   ஜன்னல் , சுற்றிலும்   இருட்டு ,  தொலை   தூரத்தில் தெரியும்   நுண்   மின்   விளக்குகள் ,  சில்   காத்து ,  தடக்   தடக்   சத்தம் என   அது   ஒரு   விதமான   வயிற்றுக்கும்   தொண்டைக்கும் உருவமில்லா     உருண்டை   உருளும்   ஃபீல் . எல்லா   பயணங்களிலும்   டிக்கட்   இருக்கிறதோ     இல்லையோ   ஒரு   புக்காவது   வேண்டும்   எனக்கு . படிக்கும்   சந்தர்ப்பம்   கிடைக்கிறதோ   இல்லையோ ,  ஒரு   புத்தகம்   கூட   இருப்பது   ஒரு வித   மெண்டல்   சப்போர்ட்   தரும் .  இந்த   பயணத்தில்   எந்தத்தொந்தரவும்     இல்லாததால்   புத்தகத்தைப் பிரித்தேன் .  கதைத்தொகுப்பு .  தலைப்பு-பயணம் . வாசிக்க   ஆரம்பித்தேன் ...    ஊருக்குப்போவது   எப்போதுமே   சுகமான   அனுபவம் .  அதுவும்   ரயிலில்   என்றால்        இன்னும்   ஜாலி . சைட்   லோயர்   கிடைத்தால்   அது   அதிர்ஷ்டம்   என்   பக்கம்        உள்ள பயணம் . ரெண்டு   ஜன்னல் , சுற்ற

இறைவா! போற்றி! போற்றி!!

ஒற்றைச்சூரியனில் ஒவ்வொரு வேளையில் ஒவ்வொரு நிறம் அடித்த அவன் மா ஓவியனா? கீச்சிலிருந்து கர்ஜனைவரை பீச்சிலிருந்து கல்லறைவரை ஒவ்வொரு ஒலி தந்த அவன் இசை வித்தகனா? மூச்சும் எச்சிலும் ஒரே தொண்டை கொண்டே எடுத்து சரியாய்ப்பிரிக்கும்  அவன் மகா மருத்துவனா? கலை நுணுக்கமென்றால் நுணுக்கத்திற்கெல்லாம் நுண்ணுணுக்கம் அறிவியலென்றால் எம் அறிவு இயலா அளவில் இயல் இயக்கம் எங்கள் பிரம்மாண்டமெல்லாம் உன் முன் அதி நுண் எனச்சுருங்கும் அகண்ட பிரம்மாண்டமே வரையறை செய்ய முடியா ஒற்றை இருப்பே, எங்கள் சக்தியெல்லாம் சேர்த்து உன் சக்தியின் எல்லையைப் பட்டியலிட்டு முடிக்கும் அப்புள்ளி, உன் அளவிலா சக்தியின் துவக்கப்புள்ளி கூட ஆகா. ஆகா! இறைவா! போற்றி! போற்றி!!