Posts

Showing posts from 2014

ச பா சா

       வெகுநாளைய கனவுகளில் ஒன்று மார்கழி சீசன் கச்சேரி பார்க்க வேண்டுமென்பது . இந்த வருடம் டபுள் தமாகாவாய் L. சுப்ரமணியன் & உஸ்தாத் அம்ஜத் அலிகான் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீயின் ( மும்பை இல்லியா ?) கச்சேரிகளை நேரில் காண வாய்த்தது . அப்துல்காதருக்கும் ஆலாபனைக்கும் என்னாங்கடா லிங்குசாமின்னு நானும் யோசிச்சேன் . சல்மான் கான் ராஜபக்ஷேக்கு பிரச்சாரம் பண்ணது , திடுதிப்புன்னு தோணி ( தோனியா தோணியா ? im weak in cricket) ரிட்டயர் ஆனது , கமல் ஏன் கேபி சாவுக்கு வரலங்குறது போன்ற இன்னபிற ஹாட் டாபிக்கில் மக்கள் பிஸியாய் இருப்பதாகத் தெரிவதால் அப்துல் காதர் ஆண்ட்ரியா தொடர்புகளை யாரும் கண்டுக்கிட மாட்டாங்கன்னு ஒரு கெஸ் .       நாரத கான சபா ( ரிஜிஸ்டர்டு ) விலே நேற்று மாலை 4 மணி கச்சேரிக்கு, பிரபல டுட்டர் குடும்பத்தினரான அமாஸ் அம்மா , ஷேகர் சார் மற்றும் அவரின் ஷே’ஹட்டான நியந்தாவோடு மிகஷ்ஷார்ப்பாக 3.15 க்கெல்லாம் சென்று விட்டோம் . அதற்கே பார்க்கிங் கிடைக்கவில்லை . எண்ட்ரியில் , ” பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரிக்கு இவ்ளோ லேட்டாவ

நாகராஜண்ணே... நல்லாருக்கியாண்ணே?

"ச்சை என்ன ஒலகமோ என்ன வாழ்க்கையோ. ஏன் பெரும்பாலும் ஏறுக்குமாறாவே நடக்குது? நல்லவனுக்கெல்லாம் சோதனை வருது. அடுத்தவன் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவன் தான் கஷ்டப்படுறான். மனசாலகூட கெட்டது நினைக்காதவனுக்கு எல்லா கெட்டதும் நடக்குது. எங்க திரும்பினாலும் பாவம், கெட்டது, அசிங்கம். இது எல்லாம் இல்லாத, மழை பேஞ்ச அடுத்த நாள் பளிச்சுன்னு இருக்க மர இலைமாதிரி சுத்தமான உலகமே அமையாதா? கடவுளே, என்னை உன் பிரியத்துக்குரியவனா நினைச்சா எனக்கு ஒரு பதில் தருவியா" மனத்தில் நினைத்தான் நாவராஸ் (நாகராஜ்). எங்கும் தன் ஆட்சியைக்குத்த வைத்திருக்கும் கடவுளாச்சே, மெசேஜ் அனுப்பி ஊதா டிக் வருமுன் வந்து நின்றார், அவன் முன். "என்னதாம்ப்பா ஒனக்கு ப்ரச்சன?" "எல்லா எடத்துலயும் ப்ரச்சன, அதான் என் ப்ரச்சன. என்ன சுத்தி நடக்குற அசிங்கம், அநீதி, எக்ஸ்ப்ளாய்ட்டேஷன் எதையும் என்னால பொறுத்துக்க முடியல. Do something and stop them." படபடவெனப்பேசி முடித்தான். "இதெல்லாம் இல்லன்னா சுவாரசியமிருக்காது. சீரியஸ்லி. ப்லீவ் மீ" என்றார் இவர். "அதெல்லாம் சால்ஜாப்பு. ஒனக்கு நலந்தானா வாசிக்கத்தெரிய