Posts

Showing posts from 2015

கதைக்கு...

பேய்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை வருவதற்கு என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு அவற்றின் மேல் நம்பிக்கை உள்ளது. பேய்கள் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் அத்தனை விஷயங்களும் நிஜம். இந்த நிஜங்களுக்கு இன்னும் வலுசேர்க்கிற வகையில் இன்னும் ஒரு விஷயம் கூறுகிறேன். பேய்கள் எந்த ரூபமும் எடுக்கும். உங்கள் கனவு அல்லது கற்பனைகளின் வீச்சுக்கள் நெருங்க மறுக்கும் ரூபமும் பேய்கள் எடுக்கும். பேய்களில் நல்ல பேய்களும் உண்டு, கெட்ட பேய்களும் உண்டு. கெட்ட பேய்கள் மற்றவர்களை பயமுறுத்தி, பயப்படும் ஜீவன்களைத் தங்களின் ஆளுகைக்குக்கீழ் அடிமைப்படுத்தி வைக்கும். நல்ல பேய்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏனைய பேய்களுக்கும்கூட உதவ நினைக்கும். எந்த வித சந்தர்ப்பத்திலும் தனக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலும் மற்றவர்களுக்கு உதவ நினைக்கும்.  இயல்பிலேயே, பேய்கள் தங்களை, தங்களின் இருப்பை மற்றவர்களுக்கு பகிரங்கப்படுத்தத் தயங்கும். அதே நேரத்தில், நல்ல பேய்கள், சிலபல குறிப்புகள் மூலம் தங்களைப்பற்றி சூசகம் கூறும். ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் இந்த சூசகங்கள் மற்றும் குறிப்புகளை வைத்து பேய்களை எளிதில் உணர்வர். ஆதி

മകളെ...

முதல் மரியாதை பட ஆரம்பத்துல சிவாஜிக்கு இழுத்துக்குட்டே இருக்குமே அத மைண்ட்ல வெச்சுக்கோங்க. --- பெங்ளூர்ல ஒரு ப்ரெண்டு. மல்லு. உடனே சிலருக்கு கண்ல pupil பெருசாவும். அப்டி எதும் பயலாஜிகல் மாற்றம் இருந்தா இப்பவே ஓடிப்போயி கண்ண கழுவிட்டு வந்துருங்க. ஒரு கவிதை இருக்கு தெரியுமா? திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவாம் என் கல்யாணம் மட்டும் ஏன் செட்டிப்பாளையத்தில் நிச்சயிக்கப்பட்டது? - கவிஞர் சக்திகனல் இதே மொமண்ட்தான் அவகூடவும். அவகிட்ட அடிக்கடி நான் கேக்கற ஒரு விசயம். கேரளாவோட ஜக்கு பிகர் கூட தமிழ்நாட்டோட ஜில்லு பிகரவிட அழகாருக்கும். பக்ஷே மோளே, நீ மட்டும் ஏன் இப்புடி இருக்க? வழக்கம்போல, ”போடாத்தெண்டி” என பதில் வரும். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட தமிழ்படம் மாதிரி இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் பிறந்திருக்க வேண்டிய கேரளப்பெங்குட்டியானு. அவ்ளோ அட்டு (அட்டாக் மீ!!!).   விப்ரோல என் ஜூனியர். ஜாவாவுல பிரிச்சு மேயுவா. எதாச்சும் புது ரெகொயர்மெண்ட் வந்தா நான் தத்தத்த-ன்னு தடவிட்டு இருப்பேன். அது டெட்லைனுக்கு முந்தியே முடிச்சுட்டு டீ

போட்டு வைத்த காதல் திட்டம் - சிறுகதை

”எத்தன தடவ கேக்குறேன், டூர் கூட்டிட்டுப்போடான்னு, இதே விஜி கேட்டிருந்தா மட்டும் ஈன்னு இளிச்சுட்டு போயிருப்ப, நான்னா ஒனக்கு அவ்ளோ எளக்காரமா? ஓவராப்பண்ணாதடா” ”ச்சீ மூடு, இந்த வாரம் கூட்டிப்போறேன்னு சொன்னேன்ல,I’ll keep up my word.” “நீ keep up பண்றதத்தான் போன மாசமே பாத்தனே. ஏற்காடு போலான்னு சொல்லிட்டு கடசீ நேரத்துல கழுத்தறுத்த” “ஓய்.. கொன்னுடுவேன். நீதான் அப்ப வயித்துவலின்னு சொன்ன. அதான் கேன்சல் பண்ணேன்” “அது வந்தா ஒனக்கென்னடா?” “எனக்கென்னவா? அப்புறம் ஏற்காட் போய் என்ன யூஸ்?” ”டேய் பொறம்போக்கு, நான் ஒன்ன கூட்டிட்டு போகச்சொன்னது ஊர் சுத்திப்பாக்க” “நீ ஊர் சுத்திப்பாரு, நான் ஒன்ன சுத்திப்பாக்குறேன்.” “இந்தக்கேவலவாதி ஜோக்கெல்லாம் விஜிகிட்ட சொல்லு. இதுக்குன்னே காத்துட்டிருந்த மாதிரி கெக்கேபெக்கேன்னு சிரிக்கும் அது. EMI போட்டாச்சும் என்ன next week tour கூட்டிட்டு போகல.., that’s it.” ப்ரதீப் ஹரிதாஸ். 8000 ரூபாய்க்கு branded ஷு பளபளக்க தரமணி புழுதிக்குள் லட்சரூபாய் பைக்கில் பறக்கும் ஐடிக்காரன். ரகசியமாகவும், சில சமயம் நேரடியாகவுமே பெண்களின் சைட்டடித்தலுக்குள்ளாகும் Smarty.