Posts

Showing posts from 2016

சுன்னத் கல்யாணம் ரிட்டன்ஸ்

Image
வாழ்க்க ஒரு வட்டம்டான்னு வருங்கால முதல்வர்  விஜை  ஒரு படத்துல சொல்லிருப்பாரு  (CM ஆகிடுவார்ல?) . அது உண்மதானோன்னு நெனைக்க வச்சிடுச்சு போன மாசத்துல ஒரு நாள். ஆமா! இருவது வருசங்கழிச்சு எஸ்டீடி ரிட்டன் ஆப் த ட்ராகனாச்சு. அது என்னது ரிட்டன்ஸ்? அப்ப இதோட ப்ரீக்வல் என்னன்னு கேக்கறவங்க இங்க போய் பாத்துக்கங்க. அடியேனின் மருமகனாருக்கு சுன்னத் கல்யாணம் செய்ய  ஒரு  டேட் பிக்ஸ் செஞ்சாங்க. மெற்றாஸ் க்ரஸண்ட் ஆஸ்பத்திரில. காலை ஏழரைக்கெல்லாம் வரச்சொன்னாங்க. கசாப்புக்கடைக்குப் போறது தெரியாம கோழிக்குஞ்செல்லாம்… சாரி.. கோழியெல்லாம் குஷியாருக்குமே, அப்டி குதூகலமா இருந்தார் மருமகனார். அடியேய், ஒன்னோட குதூகலத்துல இன்னுங்கொகொஞ்ச நேரத்துல குச்சிய விட்டு ஆட்டப்போறாங்கடியோவ்னு நெனச்சிக்கிட்டேன். அதுவும் அவனுக்கு இருப்பதோ மிகச்சிறிய குதூகலம். கடுகு சிறுத்தாலும் அதில் உண்டாகும் காயம் பெரிதுதானே. பாவம் எப்படி சமாளிக்கப்போகிறானோ என்ற ஐயப்பாடும் இருந்தது.  சொன்ன நேரத்துக்கு ஆஸ்பிட்டல் போனா அங்க ஈ காக்கா இல்ல. வெய்ட் பண்ணுங்க வருவாங்க என்று ஒரு புலூ சட்டைக்காரர் தெரிவித்தார்.  வெய்ட்டிய போது, முதன

இரைவி

ஆபீஸ்ல அலைபேசி அழைப்புகள் வந்தா ODCக்கு வெளிய போய் பேசுவோம். அன்னைக்கு அடிக்கடி வெளிய போறதும் வரதுமா இருந்தார் ஒரு fresher (பெண்).  “என்னாச்சு? ஒரு மாதிரி இருக்க?” “ஒண்ணுமில்ல” இதுங்க ஒன்னுமில்லன்னு சொன்னா ஒரு லோடு மேட்டர் இருக்குன்னு அர்த்தம். கொஞ்ச நேரம் கேப் விட்டு, “என்னப்பா, ரொம்ப டென்சனா இருக்கமாதிரி தெரியுது? எதும் ப்ரச்சனையா?”ன்னு ஆட்டோக்ராப் சேரனின் கேர்டேக்கிங் டோனில் கேட்டதும் கண் கலங்கிவிட்டாள்.  “அட அழாதம்மா கொழந்த, என்ன மேட்டர்னு சொல்லு.” “நான் சொல்றத யார்ட்டயும் சொல்லக்கூடாது” “மாட்டேன் சொல்லு” “ஒங்கள நம்பித்தான் சொல்றேன்” “விசயத்துக்கு வா” “சத்தியம் பண்ணுங்க யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னு” அவள் கை சாஃப்டாக இருந்தது. “எனக்கு ஒரு நம்பர்லருந்து தப்புத்தப்பா மெசேஜ் வருது” “ஓ… யார்ட்டருந்து?” “தெரீல..” “என்னன்னு மெசேஜ் வருது?” “ரொம்ப அசிங்க அசிங்கமா” “கால் எதும் வந்துச்சா?” “இல்ல வரல. நா கால் பண்ணாலும் எடுக்கல” “என்ன மெசேஜ்?” “சொல்லக்கூச்சமா இருக்கு” “அப்ப ஃபோனக்காட்டு நானே பாத்துக்குறேன்” “ம்ம்ஹும்ம்.. வேணாம்.. ரொம்ப அசிங்கமா இருக்

ஐலேட்சா ஐலெட்சா… - 2/2

இதோட முந்தின பார்ட்ட படிக்க “ இங்க கிலிக்குங்க ” மற்றொரு நாள், மற்றொரு ஓட்டல்ல ‘எழுதுற’ பரிச்ச. கிட்டத்தட்ட மூணு மூணர மணி நேரம். பரிச்சை ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் முன்னமே போய்டணும்னு மெய்ல்ல சொன்னாங்க. நா புலூ & கருப்பு கலர்ல ஒரு பேனா, ஒரு பென்சிலு, பெரிய அழிலப்பர் ஒன்னு எடுத்துட்டுப் போனேன். இன்னைக்கு இன்னும் பெரிய கூட்டம் வந்துருந்துச்சு. தினுசு தினுசா திமுசு திமுசா ஆல் வயஸு, ஆல் சைஸுல லேடிஸ் வந்துருந்தாங்க. ஜென்சுகளும் ஆங்காங்கே காணப்பட்டதா நியூஸ்7 செய்திக் குறிப்பு சொல்லுது. அங்க இருந்த இன்விஜிலேட்டரம்மா முடியட்டும் விடியட்டும் Ad மாதிரி திரும்பத் திரும்ப “ரெஜிஸ்டர் பண்ணாதவங்க பண்ணிக்கங்க, ரெஸ்ரூம் போறவங்க போய்க்கங்க, எக்சாம் ஹாலுக்குள்ள போனதும் ரெஸ்ட்ரூம் போக அனுமதி இல்ல”ன்னு சொல்லிட்டே இருந்தாங்க. ஒரு கட்டத்துல ஒவ்வொருத்தர்ட்டயும் தனித்தனியா ரெஸ்ரூம் போறிங்களான்னு கேக்க ஆரமிச்சிட்டாங்க. கொஞ்சம் விட்டா பஸ்ஸு கெளம்பு முந்தி டயரத் தட்டிப் பாக்குற டிரைவராட்டம் எல்லார் அடி வயித்தயும் தட்டிப்பாத்து பாத்ரூமுக்கு அனுப்பிருவாங்களோன்னு எனக்கு டுர்ராகிருச்சு.  போதாக்

ஐலேட்சா ஐலெட்சா…

Image
“IELTS எழுதப்போறேன்” என ஒன்றுவிட்ட தங்கை ஒன்றிடம் சொன்னபோது, “ஓ ஐலெட்சாண்ணா.. எழுது எழுது ஆல்திபெஸ்ட்” என்றாள். “என்னது ஐலெட்சா?” என்றதற்கு, “ஆமாண்ணா, அத அப்டிதான் சொல்லணுமாம், என் ப்ரெண்டு ஒருத்தன் எழுதினான். அவன் சொன்னான்” என்றாள். “வெளிநாடு போயிருப்பானே” எனக்கேட்டேன். “இல்லண்ணா, 6.5தான் எடுத்தானாம். மறுபடியும் எழுத ப்ரிப்பேர் பண்றான்” என்றாள். அய்யீயெல்ட்டீயெஸ் எனும் டங்டுஸ்டரைவிட, ஐலெட்ஸ் கேட்ச்சியாக இருப்பதால் அதையே டைட்டிலாக வச்சாச். தங்கை சொல்மிக்க மந்திரமில்லை. “ஆமா… நீ எதுக்கு இப்ப இந்த எக்சாம் எழுதப்போற?” எனக் கேட்பீர்களென்றால், நா ஒரு விஷயத்த எப்பப் பண்ணுவேன் எப்டி பண்ணுவேன்னு யார்க்கும் தெரியாது. ஆனா பண்ணக்கூடாத நேரத்துல கரெக்டா பண்ணுவேன். ‘ The International English Language Testing System (IELTS) is the world’s most popular high stakes English-language test, for study, work and migration, with more than 2.2 million tests taken each year’ என்பதாக, பழவேற்காடு ஏரியில் கண்டெடுக்கப்பட்ட செப்புத் தகடு ஒக்கட்டி செப்பிஸ்துந்தி. வெளிநாட்டுக்கு, படிக்கவோ வேல செய்யவோ அ

பால்யகாலலு சகிலு

படிச்சது - அதாவது ஸ்கூலுக்குப் போனது, ஊத்துக்கோட்டைன்னு ஒரு ஊராட்சி. இப்போ பேரூராட்சியாகி இருக்கலாம். சுமார் ஏழு வருஷம் அங்க படிச்சதால பெரும்பாலான பள்ளிப் பால்யம் அங்கதான் சப்ட்ராக்ட் ஆச்சு. அப்போ ஊத்துக்கோட்டை ஒரு குட்டியூண்டு, பரபரப்பு, அதிர்வு எதுவுமில்லாத ஒரு ப்ரெட்டியான பீஸ்ஃபுல் ஊர். ஊருக்கு வடக்குலயும் மேற்குலயும் ஆந்திராவ தொட்டுட்டு இருக்குற வித்தியாசமான தமிழக ஆந்திர பார்டர் பிரதேசம். வடக்குல சத்தியவேடு (விஸ்வரூபம் பாக்க மக்கள் படையெடுத்தாங்களே, தட் சேம் ப்லேஸ்). தெற்குல திருவள்ளூர். ஈஸ்ட்டுல பெரியபாளையம். வெஸ்டுல நாகலாபுரம். வெஸ்டோவெஸ்டுல வெங்கிடு ஏடுகொண்டலவாடு. எந்த வீட்டு மொட்டமாடிலருந்து பாத்தாலும் ராமகிரி மலை தெரியும். 2கிமீ தொலைவுல சுருட்டப்பள்ளி கிராமம். (அங்க ஒரு சிவன் கோயில் இருக்கு. ஒலகத்துலயே சிவன் சயன நிலைல இருக்குறது அங்கதான்). அங்க ஒரு குட்டி டேமும் இருக்கு. ஊர ஒட்டி ஆரணி ஆறு ஓடும். கொஞ்சம் தோண்டினாலே நல்ல தண்ணி ஊறும். ஊரச்சுத்தி வயக்காடு. உண்மைலயே சென்னைக்கு மிக அருகில்தான் (62ஆவது கிமீட்டர்ல மெட்ராஸ் முட்டும்). என்னடா திடீர்னு ரியல் எஸ்டேட்ல எறங்கிட்டானோ