Posts

Showing posts from March, 2016

அண்ண மேட்ரிமோனி [சிறுகதை]

அண்ணனுக்குப் பெண் பார்க்கப்போகிறோம். ஹ.., குறிப்பிட்டுச்சொல்லவேண்டிய அளவுக்கு இதில் அப்படி என்ன சிக்னிஃபிகண்ட் விஷேசம்? இருக்கிறது. இந்த ‘அண்ணனுக்குப்', ‘பெண்', 'பார்க்கப்போகிறோம்' எனும் ஸ்டேஜை அடைய அவன் எத்தனையெத்தனை பர்முட்டேசன் காம்பினேசன்களில் முட்டி மோதி, முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டு களிம்பு தடவியுள்ளான் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.   எழுதினவன் ஏட்டக்கெடுத்தான் ஜோசியக்காரன் ஜோடியக்கெடுத்தான் எனும் கதையாய் அண்ணனுக்கு எக்கச்சக்க அஸ்ட்ராலஜி சிக்கல்கள். இவனுக்கு செவ்வாய் தோஷமாம். லேசில் எந்த லேடியும் அமயாதாமாம். ஆக்ச்சுவலி இவன் புடிக்கிற தம்முக்கு இவனுக்கு கருவாய் தோஷம் தான் வரணும். (செவென் mule வயசாவுது இன்னும் அப்பாவுக்கு பயந்துக்கிட்டு திருட்டுதம்மு அடிக்குது நாயி.) ஒரு முறை அம்மாவிடம், "ஏம்மா அண்ணனுக்கு இன்னும் கல்யாணம் ஆவல?” எனக்கேட்டதற்கு, "அதுக்குலாம் நேரம் வரணும்டா. நேரம் வந்தா எல்லாம் தன்னால நடக்கும்” என்றாள். "நேரம் தான் ஆல்ரெடி டிவியிலியே வந்துடுச்சேம்மா” என்றேன். ஃபண்டமெண்ட்டல்லி ஷி இஸ் ஒன் ஓல