Posts

Showing posts from April, 2016

பால்யகாலலு சகிலு

படிச்சது - அதாவது ஸ்கூலுக்குப் போனது, ஊத்துக்கோட்டைன்னு ஒரு ஊராட்சி. இப்போ பேரூராட்சியாகி இருக்கலாம். சுமார் ஏழு வருஷம் அங்க படிச்சதால பெரும்பாலான பள்ளிப் பால்யம் அங்கதான் சப்ட்ராக்ட் ஆச்சு. அப்போ ஊத்துக்கோட்டை ஒரு குட்டியூண்டு, பரபரப்பு, அதிர்வு எதுவுமில்லாத ஒரு ப்ரெட்டியான பீஸ்ஃபுல் ஊர். ஊருக்கு வடக்குலயும் மேற்குலயும் ஆந்திராவ தொட்டுட்டு இருக்குற வித்தியாசமான தமிழக ஆந்திர பார்டர் பிரதேசம். வடக்குல சத்தியவேடு (விஸ்வரூபம் பாக்க மக்கள் படையெடுத்தாங்களே, தட் சேம் ப்லேஸ்). தெற்குல திருவள்ளூர். ஈஸ்ட்டுல பெரியபாளையம். வெஸ்டுல நாகலாபுரம். வெஸ்டோவெஸ்டுல வெங்கிடு ஏடுகொண்டலவாடு. எந்த வீட்டு மொட்டமாடிலருந்து பாத்தாலும் ராமகிரி மலை தெரியும். 2கிமீ தொலைவுல சுருட்டப்பள்ளி கிராமம். (அங்க ஒரு சிவன் கோயில் இருக்கு. ஒலகத்துலயே சிவன் சயன நிலைல இருக்குறது அங்கதான்). அங்க ஒரு குட்டி டேமும் இருக்கு. ஊர ஒட்டி ஆரணி ஆறு ஓடும். கொஞ்சம் தோண்டினாலே நல்ல தண்ணி ஊறும். ஊரச்சுத்தி வயக்காடு. உண்மைலயே சென்னைக்கு மிக அருகில்தான் (62ஆவது கிமீட்டர்ல மெட்ராஸ் முட்டும்). என்னடா திடீர்னு ரியல் எஸ்டேட்ல எறங்கிட்டானோ